சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைபொறுப்பு மீண்டும் சந்திரிக்காவிடம் வழங்க தீர்மானம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_834.html
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய நேற்று கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| ஜனாதிபதி தேர்தலின் போது, எதிரணி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்ட போது, ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என அத்துரலிய ரத்தன தேரரின் 'தூய்மையான நாளை'' அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்ட போது இந்த இணக்கப்பாட்டிற்கு உடன்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. |


Sri Lanka Rupee Exchange Rate