அல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்யவில்லை! - சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா கூறுகிறார்.
யாழ்.மாநகரசபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவருடைய கொலைக்கு யோகேஸ்வரன் கார...

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், துரையப்பா சுடப்பட்டபோது நான் அவருடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அன்றைய தினம் சிறீதர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தமையினால் தப்பித்தேன். பின்னர் என்னை கொட்டடியில் சுடப்பார்த்தார்கள்.
துரையப்பாவை சுட்டவர் பிரபாகரன் இல்லை. அவரை சுட்டது. காண்டீபன் மற்றும் இன்பம் ஆகியோரே. அவர் சுடப்பட்டபோது துரையப்பா விளையாட்டரங்கிற்குள் காருக்குள் தான் பிரபாகரன் வாழ்ந்தார். துரையப்பா சுடப்பட்டதன் பின்னர் என்னிடம் பிரபாகரன் வந்து அண்ணே என்ன நடந்தது? என கேட்டார். அப்போது துரையப்பா சுடப்பட்டதாக நான் அவருக்கு கூறினேன். பின்னர் பிரபாகரன், யோகேஸ்வரன் வீட்டில் போய் தங்கினார். துரையப்பா சுடப்பட்டதற்கு முழு காரணம் யோகேஸ்வரனே என விளக்கமளித்தார்.