ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_738.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது குறித்து சில கட்டுப்பாடுகள் வரையறைகளை ஜனாதிபதி விதித்துள்ளார்.
ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி முடிக்கும் வரையில் இந்த தடை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சாபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தரப்பு என்ற வகையில் தமக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்தப்படும் என்பது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை ஜாதிக ஹெல உறுமய கட்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை ஓர் தற்காலிகமானது எனவும் , ஜனாதிபதி மைத்திரியின் நூறுநாள் திட்டத்திற்காக இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்திட்டங்களை விடவும் நூறு நாள் திட்டத்திற்கு ஜனாதிபதி முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி கட்சி, இந்த அரசாங்கத்திற்கு ஆலோசனi வழிகாட்டல்களை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமான், ரெஜினோல்ட் குரே, ஜனக பண்டார தென்னக்கோன் போன்றவர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்காது அவர்களை உள்வாங்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் மோசடிகள் தொடாபில்அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும் என அவர்அறிவித்தள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் வரையறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தரப்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate