சொந்த அண்ணனும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ! இதுதான் அரசியல்
சகோதரரின் தோல்வியின் பின்னரே நாட்டில் இன்னும் கடவுள்களும் புத்தர்களும் என்ற பிரிவு இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியி...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_729.html
சகோதரரின் தோல்வியின் பின்னரே நாட்டில் இன்னும் கடவுள்களும் புத்தர்களும் என்ற பிரிவு இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் சபாநாயகருமான ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது தம்பி அல்ல யார் செய்தாலும் தவறு தவறுதான். ஜனாதிபதி இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நாட்டிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணி பார்க்க முடியாது.
நாட்டில் இன்னும் கடவுள்களின் பார்வையும் அனுக்கிரமும் இருக்கின்றது. இதன் காரணமாகவே எனது தம்பி தோல்வியடைந்தார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சபாநாயகர்,ஜனாதிபதி தவறு செய்யும் போது அதனை சுட்டிக்காட்ட உங்களில் எவருக்கும் முதுகெலும்பு இருக்கவில்லை.
கொடுப்பதை உண்டு விட்டு நடப்பதை வேடிக்கை பார்ப்பதை மாத்திரமே நீங்கள் செய்தீர்கள்.
மைத்திரி இப்படியான முதுகெலும்பு இருக்கும் மனிதன் என்று நாங்கள் யாரும் எண்ணியிருக்கவில்லை.
தவறியேனும் மைத்திரி தோற்று போயிருந்தால் தற்போது அவர் பொன்சேகாவை போல் சிறையில் இருந்திருப்பார்.
மைத்திரிக்கு மாத்திரமல்ல சந்திரிக்காவுக்கும் வேலை கொடுக்க இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
எனினும் நாட்டின் அதிஷ்டம் அந்த திட்டம் நிறைவேறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.