மகிந்தவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலக 800 வாகனங்கள் மாயம்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் 800இற்கும் அதிகமான வாகனங்களுக்கும் நடந்ததை அறிய முடியாதுள்ளதாக ஜ...
http://kandyskynews.blogspot.com/2015/01/800_17.html
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் 800இற்கும் அதிகமான வாகனங்களுக்கும் நடந்ததை அறிய முடியாதுள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு காணாமல் போயுள்ள வாகனங்களில் CHOGM இற்கு கொண்டுவந்த 25 கார்கள் உள்ளடங்குவதாகவும், இக் கார்கள் 25உம் பதிவு செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலக அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதிக் காரியாலயத்தில் 530இற்கு அதிகமான வாகனங்கள் இருந்ததாகவும், கடந்த நான்கு வருடங்களில் அவை இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்ததாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாகனங்களில் பெரும்பாலானவை ஜனாதிபதி ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இனால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட வாகனங்களில் அதிகமான வாகனங்களின் எவ்வித விபரமும் இல்லையெனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக தென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி காரியாலயத்திற்குரிய 14 வாகனங்களை உபயோகித்ததாகவும் அது தொடர்பாக எவ்விதத் தகவல்களும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி காரியாலயத்திலிருந்த அநேக வாகனங்களை சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வந்திருந்தபோது சுங்க அதிகாரிகளினால் அவை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் கார்கள், ப்ராடோ கெப் வாகனங்கள் அதிகளவானவை பெற்றுக் கொடுத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate