மகிந்த – முக்கியஸ்தர்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் இரகசிய இடம்புறக்கோட்டையில்
கடந்த அரசாங்க காலத்தில் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் ...


தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது தொடர்பில் நிபுணத்துவ அறிவு கொண்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இதற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்தார்.
செல்லிடப்பேசிகள் வழியான உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்லிடப் பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட தனியான ஓர் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.
கொழும்பு கோட்டே பகுதியில் இரகசிய இடமொன்றில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும் புதிய அரசாங்கம் இந்த ஒட்டுக் கேட்கும் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கும் நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.