3 கசினோக்களின் அனுமதிகள் ரத்து: 14 நாட்களில் சாதனை புரிந்துள்ளது அரசு: ரணில்
பதின் நான்கே நாட்களில் நாட்டில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தியதோடு சிறந்த வரவு-செலவுத் திட்டத்தையும் முன்வைத்து தமது அரசு உலக சாதனை படைத்துள...

12ம் திகதி பதவியேற்றபோதும் முதல் மூன்று நாட்கள் பாப்பரசரின் வருகை மற்றும் நிகழ்ச்சி நிரலில் கூடிய கவனத்தை செலுத்தியிருந்த நிலையில் எஞ்சியிருந்த 14 நாட்களிலேயே இத்தனையையும் தமது அரசாங்கம் சாதித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி, கடந்த அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்த மூன்று கசினோ அனுமதிப் பத்திரங்களையும் உடனடியாக ரத்துச் செய்திருப்பதாகவும் இன்று சபையில் பிரதமர் தகவல் வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில் 14 நாட்களில் இந்த அரசாங்கம் செ;யதிருப்பது சாதனை என பிரதமர் பெருமிதத்துடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.