இராஜதந்திர பதவி பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்த போதிலும் மொகான் பீரிஸ் அது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு இராஜதந்திர பதவியொன்றைப் பெற்றுக்கொள்ள முன்னர் இணக்கம் தெரிவி...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_396.html
பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு இராஜதந்திர பதவியொன்றைப் பெற்றுக்கொள்ள முன்னர் இணக்கம் தெரிவித்த போதிலும் பின்னர் அது தொடர்பான கூட்டமொன்றில் கலந்து கொள்ளாமல் விலகிச் சென்று விட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தான் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு ரோமில் இராஜதந்திர பதவியொன்றைப் பெற்றுச் செல்ல இணக்கம் தெரிவித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தார். அவ்வேளையில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும் அந்தக் கூட்டம் முடிவடையும் முன்னரே அவர் சடுதியாகச் சென்றுவிட்டார்.
அவர் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் மேற்கொண்ட இரண்டு கட்டப்பேச்சுகளின் போது தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். இது எனது முன்னிலையில் இடம்பெற்றது. அவர் தனக்கு இராஜதந்திரப் பதவியொன்று தரப்பட வேண்டும் எனக் கோரினார். நான் வெளிவிவகார அமைச்சுடன் பேசி அவருக்கு ரோமில் இராஜதந்திர பதவியொன்றை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தேன்.
கடந்த 21ஆம் திகதி அவரது கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்தக் கூட்டத்தை நடத்தினோம். பிற்பகல் 5 மணியளவில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு ரோமுக்கான தனது பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்திருந்த அவர் திடீரென வந்த தொலைபேசி அழைப்பொன்றையடுத்து அங்கிருந்து சென்றுவிட்டதாக அறிந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவப்புரட்சிக்கான முயற்சி தொடர்பில் பிரதம நீதியரசரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத்துறையினர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் வௌ்ளியன்று மாலை வாக்குமூலத்தை பெற்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட முறைப்பாட்டில் அதிகாரத்தைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக மொஹான் பீரிஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் அலரி மாளிகைக்கு ரணில் விக்கிரமசிங்க சென்ற போது அங்கு மொஹான் பீரிஸ் நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டின் பேரில் பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Sri Lanka Rupee Exchange Rate