பணயக் கைதி கொலை வீடியோ குறித்து ஜப்பான் ஆராய்கிறது
சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து...

சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது.

அதேநேரம் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராய பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையில் அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஜப்பான் பணியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியிட்டுள்ள கொலையை மன்னிக்க முடியாதது என்று தலைமை அமைச்சரவைச் செயலர் யேஷிஹைட் சுகா வர்ணித்துள்ளார்.
ஜப்பான் தமக்கு 200 மில்லியன் டாலர்களை பணயத் தொகையாக செலுத்தாவிட்டால் இந்த இருவரும் கொல்லப்படுவார்கள் என்று இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.