முஸ்ஸமிலுக்கு கொலை அச்சுறுத்தல்!
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமாகிய முஸ்ஸமிலுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_395.html
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமாகிய முஸ்ஸமிலுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மொஹமட் முஸ்ஸமில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தன்னுடைய வீட்டுக்கு அருகில் சிவில் உடையில் வரும் சிலர் தான் பயணிக்கும் நேரம் மற்றும் வாகனம் குறித்த தகவல்களை கோரியுள்ளதாக அக்கடிதத்தில் முஸ்ஸமில் கூறியுள்ளார். நேற்று தான் இல்லாத நேரத்தில் பொலிஸ் குழுவொன்று தனது வீட்டுக்குள் பலாத்காரமாக நுழைய முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்துமாறு முஸ்ஸமில் பொலிஸ் மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate