றிசாத் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசேட செவ்வி.
இன்றைய தினம் முஸ்லிம்கள் விசேட பிரார்த்தனைகளை செய்வதுடன்,அனைத்து முஸ்லிம் மக்களும் தமது வாக்குகளை அளித்து இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிர...

இன்றைய தினம் முஸ்லிம்கள் விசேட பிரார்த்தனைகளை செய்வதுடன்,அனைத்து முஸ்லிம் மக்களும் தமது வாக்குகளை அளித்து இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இந்த அரசையும்,அதற்கு துணையாக இருக்கின்ற பொதுபலசேனாவினையும் தோல்வி காணச் செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இன்று இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசேட செவ்வியொன்றினை ஊடகங்களுக்கு வழங்கினார்.
உலமாக்களே,சகோதர ,சகோதரிகளே,
இன்றைய தினம் (8 ஆம் திகதி )இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானதொரு நாளாகும்.இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஆட்ச்சியினை தொடரவிடாமல் மன வேதனையும்,பாதிப்புக்களையும்,இழப்புக்களையும் சந்தித்த எமது சகோதர முஸ்லிம்களின் தமது வாக்குகளை இதற்கு எதிராக அளிக்க வேண்டிய நாளாகும்.
தம்புள்ள முதல் அளுத்கம வரை பள்ளிவாசல்கள்,இந்த அரசாங்கத்தின் இனவாத சக்திளின் மூலம் தாக்கப்பட்டது.அதே போல் அல்லாஹ்வுக்கு உருவத் இல்லை எளன்பதை ஏற்றுக்கொண்டுள்ள எமது சமூகத்தை மிகவும் வேதனைக்குட்படுத்திய சம்பவமாக பன்றியின் தலையினையும்,அதனது மாமிசத்தையும் சேர்த்து அல்லாஹ் என்றெழுதி பள்ளிவாசலுக்குள் போட்டனர்.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன,சில வர்த்தக நிறுவனங்கள் இழந்த சொத்துக்களின் இழப்பு 400 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்கள் இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
இந்த நிலை தொடருமெனில் நாம் இந்த நாட்டில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும்,இதனை மாற்ற வேண்டுமத் என்பதற்காக பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கின்ற மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பது தான் சரி என்பதை கண்டோம்.
எனவே சகோதர,சகோதரிகள்,தாய்மார்கள்,கறறவர்கள்,இளைஞர்கள்,யுவதிகள் என்று எல்லா தரப்பினரும்,எமது சமூகததின் விடிவுக்கும்,எதிர்கால நளைய சமூகத்தின் உத்தரவாதத்திற்கும் தியாகங்களை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது.தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வதுடன்,இன்றைய தினம் தமது வாக்குகளை இந்த அராஜக சக்திகளுக்கு எதிராக எமது வாக்குகளை பயன்படுத்துவதுடன்,எல்லாம் வல்லாஹ்விடம் தியானத்தினையும் மேற்கொள்வதன் மூலம்,இந்த சக்திகளை அல்லாஹ் தோல்வியடையச் செய்வான் என்ற நம்பிக்கையுடன் இறைஞ்சுவோமாக என்றும் முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் சகல முஸ்லிம்களையும் கேடடுள்ளார்.