அலரி மாளிகை பாதுகாப்பு பணியில் 800 பொலிசார்
அலரி மாளிகை பாதுகாப்புப் பணிக்காக டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் 800 பேர் கொண்ட பொலிஸ் படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ...

http://kandyskynews.blogspot.com/2015/01/800.html
அலரி மாளிகை பாதுகாப்புப் பணிக்காக டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் 800 பேர் கொண்ட பொலிஸ் படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வீதித்தடைகளுடன் கூடிய இவ்விசேட பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர் கொழும்பு நகரெங்கும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதுடன் தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், இத்தனை பெரிய படையணி அலரி மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதன் பின்னணி குறித்து அவர் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.