தடைகளை தாண்டிச்சென்று வாக்குரிமை கடமையை நிறைவேற்றிய மன்னார்,முல்லை மாவட்ட மக்கள்.
வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து நீண்டகாலமாக புத்தளத்தில் வசிக்கும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க செல்வதற்கென தேர்தல் ஆணய...

வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து நீண்டகாலமாக புத்தளத்தில் வசிக்கும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க செல்வதற்கென தேர்தல் ஆணயைாளரினால் ஏறபாடு செய்யப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 20 பஸ் வண்டிகளையும் புத்தளம் பிரதேச ஆளும் கட்சியின் அமைப்பாளர் ஒருவரினால் சாரதிகளுக்கு அச்சுறுத்தல்விடுக்கப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவத்தால் வாக்காளர்கள் பெரும் சிரம்களை எதிர் கொள்ள நேரிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் சுமார் 20 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்கள் மன்னார்,முல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்னும் புத்தளத்தில் வசித்துவருகின்றனர்.இடம் பெயர்ந்தவர்களில் ஓரு தொகையினர் மீள்குடியேறறம் செய்யப்பட்ட நிலையில் அவர்களது வாக்குகள் அவர்கள் வசிக்கும் கிராமங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக புத்தளத்தில் வாழும்,இம்மக்களை அவர்களது பிரதேசங்களுக்கு சென்று வாக்களிக்க போதுமான பிரயாணவசதிகளை செய்து கொடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஜதுரூஸ் முஹம்மத் இல்யாஸ் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் ஆகியோர் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இதற்கமைய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் 2015.01.07 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு பொலீஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில்(DE/CE/02/04) இம்மக்கள் வாக்களிக்க செல்லவென இ.போ.ச,தனியார் பஸ் வண்டிகள் அல்லது வாகனங்களில் சென்று வாக்களிக்க தேவையான அனுமதிய வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கு தடைகள் ஏற்படாது தேவையான பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்குமாறும் வேண்டியிருந்தார்.இந்த பஸ் வண்டிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒவ்வொரு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டு இதனை நெறிப்படுத்தும் பொறுப்பினை அநுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் தேர்தல் ஆணையாளரினால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இவ்வாறு அவரது பணிப்புரை இருந்த போது புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பஸ் வண்டிகள் கொண்டுவரப்பட்டிருந்த போது அங்கு வருகைத்தந்த ஆளும் கட்சிய புத்தளம் அரசியல்வாதியொருவர்இந்த சாரதிகளை அச்சுறுத்தி இம்மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என பஸ்களை திருப்பியனுப்பியுள்ள சம்பவம் தேர்தல் தேர்தல் ஆணையாளரின்ன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்று மாலை தொடக்கம் இம்மக்கள் மன்னார்,முல்லைத்தீவு மாவட்டத்தற்கு வாக்களிக்க செல்ல காத்திருந்த போதும்,பின்னர் இம்மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இருந்த போதும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முச்சக்கர வண்டி,கெண்டர்,மோட்டர் சைக்கிள் உ்ளிளட்ட தனியார் வாகனங்கள் பலவற்றிலும் இம்மக்கள் இன்று அதிகாலை முதல் மன்னார்,முல்லைத்தீவுக்கு வாக்களிக்க சென்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஜனநாயக நாடொன்றில் சுதந்திரமாக தமது வாக்குகளை அளிகக முடியாமல் ஆளும் கட்சி அரசியல் வாதி மேற்கொண்ட இந்த செயற்பாட்டை பலரும் கண்டித்துள்ளனர்.
அதே வேளை நேற்று நள்ளிரவிற்கு பின்னர் மன்னார் நோக்கி வாக்களார்கள்செிலர் தனியார் வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியினை மறித்து பாரிய மரமொன்றினை அறுத்து தடைகள் ஏற்படுத்திருந்த நிலையில் அவற்றை அதிகாலையில் ஸ்தலத்மிற்கு சென்ற பொலீஸார் பிரதேச மக்களின் உதவியுடன் அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் ஜதுரூஸ் மொஹமட் இல்யாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக ஆகியோர் தேர்தலை ஆணையாளரை கேட்டுள்ளனர்.