ரூபவாஹினுக்கு விஜயம் செய்து எச்சரித்த தேர்தல் ஆணையாளர்

 அரச தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, போலியான செய...

 அரச தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, போலியான செய்திகளை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு எச்சரிக்கை செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆளும் கட்சியில் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டார். இதனையடுத்தே தேர்தல் ஆணையாளர், அரச தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.

Related

இலங்கை 3965423881840265792

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item