கண்டியில் நிலவி வரும் வாகன நெரிசலைத் தடுக்க தலா மாளிகைக்கு எதிரில் உள்ள பாதையை திறக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.!!

சொல்வதற்கு ஏதுவுமின்றி சில அரசியல் கட்சிகள் நாடு பிளவடையும் என தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறி வருவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி...



சொல்வதற்கு ஏதுவுமின்றி சில அரசியல் கட்சிகள் நாடு பிளவடையும் என தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறி வருவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் நாடு பிளவடையும் என பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

அனைத்து தேர்தல் காலங்களிலும் சில கட்சிகள் இந்த கோசத்தை தேர்தல் பிரச்சார மேடையில் எழுப்புவதனை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தென்படவில்லை.

இன்னும் கொஞ்ச காலம் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டியிலும் துறைமுகமொன்று அமைக்கப்பட்டிருக்கும்.


பிள்ளையானுக்கு கூட்டமைப்பில் தேசியப் பட்டியல் உறுப்புரிமை வழங்குவதாக அறியக் கிடைத்தது, கருணாவிற்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையா?

கண்டியில் நிலவி வரும் வாகன நெரிசலைத் தடுக்க தலா மாளிகைக்கு எதிரில் உள்ள பாதையை திறக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கடந்த அரசாங்கத்தினால் எல்லையில்லாமல் செய்த ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தியதில் தவறில்லை என கண்டி மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல, மல்வத்து பீடாதிபதியை நேற்று சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
thibboyuwawe_thero_02
-

Related

இலங்கை 5503544421709395399

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item