அகதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட விருந்து: திருமண விழாவில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

துருக்கியில் புதிதாய் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், தங்களது திருமண விருந்தை அகதிகளுடன் பரிமாறிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...



துருக்கியில் புதிதாய் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், தங்களது திருமண விருந்தை அகதிகளுடன் பரிமாறிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிலிஸ் கிராமத்தில், Fethullah Uzumcuoglu மற்றும் Esra Polat ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இவர்கள் திருமணத்தில் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக, இவர்களின் திருமண விருந்தை சிரியா அகதிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து மணமகனின் தந்தை கூறியதாவது, சுவை மிகுந்த உணவு வகைகளை உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு திருமண விழாவை கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

ஆனால் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் லட்சக்கணக்கான அகதிகள் துருக்கியின் கிலிஸ் பகுதியில் உள்ளனர்.


அவர்களுக்கு ஒருவேளை உணவு அளிப்பதில் கிட்டும் மட்டற்ற நிறைவு புதுமண தம்பதிகளுக்கு ஆசீவாதமாக அமையும் என்றார்.

இதனையடுத்து Fethullah Uzumcuoglu மற்றும் Esra Polat திருமண விழாவில் கிலிஸ் பகுதியில் உள்ள 4000 சிரியா அகதிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த திருமண விழாவிற்காக புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினர் அனைவரது சேமிப்பையும் வழங்கியுள்ளனர்.

பாரம்பரியமாக துருக்கி திருமணங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை மாபெரும் விருந்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
thukery_couple_002

Related

உலகம் 4166765337441703780

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item