கண்டி தலதா மாளிகைக்குள் அகப்பட்டார் பெண் பித்தன்…?

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விளக்கேற்றும் பெண்களது அந்தரங்க உறுப்புக்களை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்த இளைஞரை எதிர் வரும் 14ம் திகதி வர...

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விளக்கேற்றும் பெண்களது அந்தரங்க உறுப்புக்களை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்த இளைஞரை எதிர் வரும் 14ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி நீதவான் டப்.எம்.ஏ.வசந்தகுமார உத்தரவிட்டார்.

(6.7.2105) மேற்படி சந்தேக நபர் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியென பொலீசார் நீதி மன்றில் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் சந்தேக நபர் இதே குற்றம் சாட்டில் கைதாகி பிணையில் விடுதலையானவராகும்.

சந்தேக நபர் குருநாகலை தெனியாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சுரவீர ஆரச்சிகே தொன் சுனில் சம்பத் சுரவீர என்ற 33 வயதுடையவராகும்.

மேற்படி சந்தேக நபர் ஸ்ரீதலதா மாளிகையில் பெண்கள் கூட்டமாக குழுமிய நிலையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கும் போது தனது கைக் குட்டையை கிழே தவற விட்டது போல் பாசாங்கு செய்து அதனை எடுக்கும் போது தனது கையடக்கத் தொலைபேசி மூலம் இளம் பெண்களது அந்தரங்க உறுப்புக்களை புகைப்படமெடுத்ததாகக் கூறப்பட்டதை அடுத்து தலதா மாளிகைப் பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்து கண்டி பிரதான நீதவான் வசந்த குமார முன் ஆஜர் செய்தனர்.

கடந்த 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்ட அவர் மீண்டும் விசாரணைக்கு(6.8.2015) எடுக்கப்பட்ட பொது எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டது.

அத்துடன் முறைப்பாட்டை விசாரித்த பிரதான நீதவான் சந்தேக நபரை மனநோய் மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கண்டிப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

இலங்கை 2095128488405876957

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item