வவுனியா A/L மாணவி தற்கொலை..! சிக்கலில் அதிபர்.

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் ...

OLYMPUS DIGITAL CAMERA
வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…..

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று வந்த திவ்யா என்ற மாணவி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு தனது அனுமதி அட்டையினைப் பெறுவதற்காக பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார்.

அதிபர் அனுமதி அட்டை கொழும்பிலிருந்து இரண்டு தினங்களில் வந்ததும் தருவதாக கூறியுள்ளார்.

இரண்டு தினங்களின் பின்னர் தாயுடன் அனுமதி அட்டையினைப் பெறுவதற்கு சென்றபோது அனுமதி அட்டை வந்தள்ளது அதிபர் வெளியே சென்றுள்ளார் வந்ததும் பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

அனுமதி அட்டையினைப் பெற்றுவருமாறு கூறிவிட்டு தாயார் சென்றுவிட்டார்.

திவ்யா அதிபர் வரும் வரை காத்திருந்து அனுமதி அட்டையினைக் கேட்டபோது உமக்கு கணிதபாடம் இல்லை எனவே அனுமதி அட்டை தரமுடியாது என்று கூறியுள்ளார்.

மனம் உடைந்த மாணவி செய்வதறியாமல் இருந்துள்ளார். பிற்பகல் 3.30மணிக்கு வீடு சென்ற மாணவி தனது பாடப் புத்தகத்தில் தனக்கு பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதையும் தான் குடும்பத்தினர் மீது வைத்துள்ள பற்று பாசம் என்பனவற்றையும் விபரித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

6 மணி ஆனதும் தயார் திவ்வியாவைத் தேட ஆரம்பித்துள்ளார். அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளிலும் இல்லை என்றதும் உறவினர் அனைவருக்கும் தகவல் கிடைத்ததும் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து 250 மீற்றர் தூரத்திலிருக்கும் பொதுக் கிணற்றடியில் திவ்யாவின் பாதணி இருந்ததையடுத்து கிணற்றுக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட திவ்யாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணவிசாரணை அதிகாரி மரண விசாரணையினை மேற்கொண்டார். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலய அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
OLYMPUS DIGITAL CAMERA
Vauneja 02

Related

இலங்கை 5477810154960682821

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item