எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். மஹிந்தவின் தேர்தல் மேடையில் அதிர்ச்சி கொடுத்த காமினி லொக்குகே. |!!
எதிர்வரும் பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தே...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_24.html

எதிர்வரும் பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் மேடையில் இருந்து தெரிவித்துள்ளார்.
அவர் தவறுதலாக கூறிய நிலையில் “ரணில் அல்ல மஹிந்த” என அருகில் இருந்த ஒருவர் கூச்சலிட்டுள்ளதனை தொடர்ந்து,
ரணில் பழைய தலைவர் என்பதனால் இன்னமும் அவரது ஞாபகங்கள் மற்றும் பழக்கத்தில் கூறிவிட்டேன் என காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
காமினி லொக்குகே தனது பழைய தலைவரை கைவிட்டு மஹிந்த ராஜபக்சவின் கைகளை வலுவடைய செய்வதற்காக அவரிடம் வந்து 10 வருடங்களாகிய நிலையில் 10 வருடகால பகுதியின் ஞாபகங்கள் எவ்வாறு இல்லாமல் போனதென அரசியல் துறையில் தற்போது அதிகமாக பேசப்படும் ஒரு விடயமாகிவிட்டது.
எனினும் இது தொடர்பில் ஆராயும் போது மஹிந்த ராஜபக்சவுடன் முன்னணி மேடைகளில் இருப்பவர்கள் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate