“SLMC” சுயரூபம் அம்பலம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

http://kandyskynews.blogspot.com/2015/07/slmc.html

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ‘ஸீ பிறீஸ்’ ஹோட்டலில், நடத்தி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே, ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும், 13க்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும்.
குறிப்பாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு, எதிர்வரும் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தும். இருப்பினும், நிபந்தனையற்ற வகையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதை ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். அதன்போது நிச்சயமாக, கல்முனை கரையோர மாவட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத்தரும்.
அதேவேளை, சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கென உள்ளூராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொடுப்பதில், முஸ்லிம் காங்கிரஸ் தெளிவானதொரு முடிவோடு உள்ளதாகவும், ஊடகவியலாளர்களிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறினார்.உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜெயசூரியவை முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், துரதிஷ்டவசமாக இடைநடுவில் நாடாளுமன்றம் கலைந்து விட்டது எனவும் குறிப்பிட்டார்.