பிரித்தானியாவில் பாம்பு பிடித்த சந்திரிகாவின் மகன்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க லாபமாக பாம்பு ஒன்றை பித்துள்ளார். பிரித்தானியாவில் கார...

காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய பாம்பை மீட்க முடியாது போராடிய காரின் சாரதி தனது நண்பரான விமுக்தி குமாரதுங்கவை தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் உதவி கோரியுள்ளார்.
பின் அவ்விடத்திற்கு வந்த விமுக்தி, காரில் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி, பாம்புக்கும் பாதிப்பு இன்றி அதனை மீட்டெடுத்ததாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் மூன்று மணித்தியாலங்களாக செயற்பட்டு விமுக்தி தனது காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பின்னர் பாம்பு மிருக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அனுபவத்தை இதற்கு முன்னர் பெற்றதில்லை என விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார்.