அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருப்பது ஐ.எஸ் பயங்கரவாதமா? அல்கொய்தாவா? (வீடியோ இணைப்பு)
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் தலைவர...


வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் தலைவர் ஜேம்ஸ் காமீ தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை அவர்கள் வெளியிட்டு வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இந்நிலையில், “அல்-காய்தாவைவிட, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புதான் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் தலைவர் ஜேம்ஸ் காமீ தெரிவித்தார்.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் அவர் கூறியதாவது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது, சமூக வலைதளங்கள் வாயிலாக கணிசமான அமெரிக்கர்களை தனது பக்கம் ஈர்த்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தற்கொலை தாக்குதலை நடத்தாமல், சொந்த நாட்டில் இருந்தவாறே தாக்குதல் தொடுக்குமாறு, அவர்களுக்கு ஐ.எஸ். அமைப்பு அறிவுறுத்தி வருகிறது.
இதன்காரணமாக, அல்கொய்தாவைவிட ஐ.எஸ். அமைப்புதான் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஜேம்ஸ் கோமே தெரிவித்துள்ளார்.
நாங்கள் செயல்படும் பகுதிகளில், வேறு எந்த பயங்கரவாத அமைப்புகளையும் அனுமதிக்கமாட்டோம்’ என்று ஐ.எஸ். அமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.