பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாக்கும் வரை ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ம.வி.மு தெரிவிப்பு
ஜனவரி 8 இல் பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாக்கும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித...


ஜனவரி 8 இல் பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாக்கும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை மாத்திரமன்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அழித்துள்ளதாக அநுரகுமார மேலும் தெரிவித்தார்.
அத்துடன், திறைசேரி முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற குளறுபடி காரணமாக மத்திய வங்கி ஆளுநரைப் பதவி விலக்குவது சரியான முடிவென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மத்திய வங்கி சர்ச்சையில் சிக்கியுள்ள மோசடிக்காரர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பத்திலிருந்தே பாதுகாக்க முயற்சிப்பதாகவும் அநுரகுமார குற்றம் சாட்டினார்.