'தென்கொரிய விமான நிறுவன துணைத் தலைவர் குற்றவாளி"
தென்கொரியாவின் விமான நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் விமான போக்குவரத்துச் சட்டங்களை மீறியிருப்பதாக அந்நாட்டு நீதி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_614.html
தென்கொரியாவின் விமான நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் விமான போக்குவரத்துச் சட்டங்களை மீறியிருப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட மகடமியா பருப்பை, முறையாக வழங்கவில்லையென்பதால், அதை அளித்த விமானப் பணிப்பெண்ணை கீழே இறக்குவதற்காக விமானத்தை திருப்பும்படி வலியுறுத்தினார் என விமான நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான ஹீதர் சோ மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். அரசுத் தரப்பு மூன்றாண்டு சிறை தண்டனை கோரியுள்ளது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று, நியூ யார்க்கின் ஜே.எஃப்.கே. விமான நிலையத்திலிருந்து சியோல் செல்வதற்காக ஓடுபாதைக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தை, மீண்டும் வாசலுக்கே திருப்பும்படி சோ உத்தரவிட்டார். அந்த விமானத்தின் தலைமைப் பணிப்பெண்ணை கீழே இறக்கிவிடுவதற்காக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட மகடமியா பருப்புகள் ஒரு கிண்ணத்தில் வழங்கப்படாமல், பாக்கெட்டில் வழங்கப்பட்டதையடுத்து சோ கடும் கோபமடைந்ததாக அப்போது விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஹீதர் சோ தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தலையிட்டதாகவும்கூட குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
தென்கொரியாவில் இந்த வழக்கு வெகுவாகக் கவனிக்கப்பட்டுவந்தது.


Sri Lanka Rupee Exchange Rate