கிழக்கு யுக்ரெய்னில் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு உடன்பாடு: புட்டின்

கிழக்கு யுக்ரெய்னில் போர்நிறுத்த ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளதாக ரஷியன் அதிபர் விளாடி...

கிழக்கு யுக்ரெய்னில் போர்நிறுத்த ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ளதாக ரஷியன் அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.

மின்ஸ்க்கில் நடந்த பேச்சுவார்த்தை

இது பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். மேலும், கனரக பீரங்கிகளை பயன்படுத்துவதில்லை என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

புதன் இரவிலிருந்து 15 மணி நேரத்திற்கு அதிகமாக யுக்ரெய்ன் அமைத்திக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை இடைவேளையின்போது பேசிய யுக்ரெய்னிய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ரஷ்யாவால் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகள் ஏற்கதக்கது அல்ல என்று முன்னதாக தெரிவித்தார்.

பெலாருஸ்ஸின் மின்ஸ்க் நகரில் நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளால் நடத்தப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பை மற்றவர் விரைத்துக்கொண்டு பிடிவாதம் செய்ய பதற்றம் நிலவுவதாக அதிபர் பொரொஷென்கோவின் உதவியாளர் ஒருவர் முன்னர் தெரிவித்தார்.

கிளர்ச்சிக்காரர்கள் புதிய தாக்குதல் ஒன்றை தொடங்கியதிலிருந்து சமீக வாரங்களாக கிழக்கு யுக்ரெய்னில் வன்முறை அதிகரித்துள்ளது.

Related

உலகம் 8023903202169181851

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item