பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு அமெரிக்க அமைப்பு கண்டனம்
இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு...


இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு கண்டித்துள்ளது.
இந்த ஊடக ஒழுங்கமைப்பின் மூலம் ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகிறது.
1973ஆம் ஆண்டு பத்திரிகை சபை முதன்முறையாக அமைக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
எனினும் இந்த சபையின் ஊடகவியலாளர்களின் செய்திகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் அந்த சபை தொடர்பில் தொடர்ந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால பத்திரிகை சபையை கலைத்தார்.
எனினும் கடந்த 2ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சபைக்காக இரண்டு புதிய உறுப்பினர்களை நியமித்தார்.
இது ஏற்கத்தக்க விடயம் அல்ல என்று ஊடகவியலாளர்களை பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.