மஹிந்தவிற்கு ஆதரவான செய்தியாளர் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பொன்று இறுதி நேரத்தில் பேச்சாளர்கள் பங்கேற்காத...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_290.html
கண்டியில் நேற்று இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவிருந்தது.
கண்டி றோயல் மோல் ஹோட்டலில் பிற்பகல் 2.00 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்பில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
15 மாகாணசபை உறுப்பினர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்பிற்கு வருகை தரவில்லை.
இதனால் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற ஒரு உறுப்பினர்கள், மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்திற்கு உரியளவு பணம் வழங்குவதில்லை என ஊடகவியலாளர்களிடம் குற்றம் சுமத்தினர்.
மஹிந்தவிற்கு ஆதரவாக நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பினை ரத்து செய்து, மாகாண சபையின் சில விடயங்கள் மட்டும் பேசி சந்திப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காத உறுப்பினர்களை செல்லிடப் பேசி மூலம் தொடர்பு கொள்ள பங்கேற்றவர்கள் முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.