சிங்கள மக்களை தூண்டிவிட மகிந்தராஜபக்ச பொதுபலசேனாவுடன் ஒப்பந்தம்
கை நழுவிப்போன ஆட்சிக்காக மீண்டும் கனவு காணும் மஹிந்த ராஜபக்ஷவிற்காக பொது பல சேனா அமைப்பு வழமை போல் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_823.html
கை நழுவிப்போன ஆட்சிக்காக மீண்டும் கனவு காணும் மஹிந்த ராஜபக்ஷவிற்காக பொது பல சேனா அமைப்பு வழமை போல் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சித்து வருகின்றது.
அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி நுகேகொடவில் நடத்தப்படவிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கூட்டத்தில் சிங்கள மக்களைத் தூண்டிவிடும்படியான கருத்துக்களை முன்வைக்க ஒப்பந்தமொன்றை பொதுபல சேனாவின் உறுப்பினரொருவர் ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் பெயரில் வியாபாரம் செய்யும் பொது பல சேனா அமைப்பினர் தமது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பகிரங்கமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அவ் அமைப்பில் இனாவாத மதவாதம் வெறிகொண்ட சில உறுப்பினர்கள் இன்னும் அவ் அமைப்பிற்குத் துணை போவதால் சிங்கள மக்களின் பெயரை விற்று ஆட்சியைப்பிடிக்க அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.