சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பஸில் பிரசாரம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவான பிரசார நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவான பிரசார நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துகொண்டு சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வேட்பாளர்களான சுசந்த புஞ்சிநிலமே, நஜீப் ஏ. மஜீத், சட்டத்தரனி கரிகாலன் மற்றும் தண்டாயுதபாணி எனப் பலர் கலந்துகொணடனர்.