ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: இறந்த தோழியின் கையை இறுகப்பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய பெண் (வீடியோ இணைப்பு)
துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐ.எஸ்.தீவிரவா...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_806.html

துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்றும் குர்தீஸ் தீவிரவாதிகளாலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால், இதற்கு முடிவு கட்டும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
சிரியாவின் எல்லையில் சோதனை நடத்தி நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்களில் குர்தீஸ் தீவிரவாதிகளும் அடங்குவர்.
மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், துருக்கியின் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில், 32 பேர் பலியானார்கள்.
மேலும், காயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான ஒரு புகைப்படத்தில் பெண்மருத்துவர் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் இறந்துபோன தனது தோழியின் கையை இறுகப்பிடித்துக்கொண்டு கிடக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது, இதனைப்பார்த்த மீட்பு படையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண் மருத்துவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவருக்கு 14 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துருக்கி ஜனாதிபதி தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று காயமுற்றவர்களிடம் அவர்களது நலன் குறித்து விசாரித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate