புலிகளுக்கு உதவிய இராணுவ அதிகாரி யாழ்.மேல் நீதிமன்றால் விடுதலை
விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாற...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_78.html

பட்டத்துவ ஆராய்ச்சிஹே அசிதபிரபா என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
குறித்த இராணுவ அதிகாரி, விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு இராணுவத்தினரின் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரது வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, அங்கிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் குற்றமற்றவர் என அவரை இனங்கண்ட யாழ். மேல் நீதிமன்றம், வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.