மைத்திரியின் அடுத்த ஆப்பு இதுவா…?
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யானை சின்னத்தின் கீழ் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகி...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_768.html
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யானை சின்னத்தின் கீழ் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், அவரது களுத்துறை இல்லத்துக்கு திடீரென நேற்று (21) விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
அங்கு குழுமியிருந்த ராஜித ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவரை ஆதரித்து மினி பிரசாரமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டுமன்றி, பொதுத் தேர்தலின் பிறகு தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிபெறுவதற்கு வழி சமைத்தவர்களில் ராஜித சேனாரத்னவுக்கும் முக்கிய பங்குண்டு.
அதேவேளை நேற்று மகிந்தவுக்கு எதிராக இன்னும் இரண்டு ஆப்புகளை வைக்க தான் தயாராவதாக ஜனாதிபதி மைத்ரி.
ஒருவேளை தனக்கு ஆதரவளித்த UPFA இல் இருந்து தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளவர்களுக்கு சாதகமாக பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அதில் ஒரு ஆப்பாக இருக்க கூடும் என்பதும் எமது கணிப்பு.


Sri Lanka Rupee Exchange Rate