நவீன பறக்கும் கார் அறிமுகம்
சாதாரண கார் தரிப்பிடத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்பெற்ற வ...


சாதாரண கார் தரிப்பிடத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்பெற்ற வருடாந்த பரீட்சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
ரி.எப்.- எக்ஸ் என அழைக்கப்படும் இந்த பறக்கும் காரானது தரையில் மணிக்கு 200 மைல் வேகத்திலும் வானில் மணிக்கு 500 மைல் வேகத்திலும் பயணிக்கும் வல்லமையைக் கொண்டது.
இந்த 4 பேர் பயணிக்கக் கூடிய கார் சாரதியாலும் கணினி மூலம் தன்னியக்க ரீதியிலும் செயற்படுத்தக் கூடியதாகும்.
இதன் காரணமாக இந்தக் காரில் பயணிப்பவர்கள் செல்ல வேண்டிய பிராந்தியத்தை கணினியில் பதிவு செய்யும் போது அது குறிப்பிட்ட இடம் பறக்கும் காரை தரையிறக்குவதற்கு உகந்த இடமாக அமையாவிடில் தரையிறக்குவதற்கு வேறு இடத்தைத் தெரிவு செய்வதற்கு கோரும்.
எனினும் இந்தக் காரை நடைமுறைப் பயன்பாட்டிற்கு உகந்ததாக மேம்படுத்துவதற்கு இன்னும் 8 முதல் 12 வருடங்கள் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் காரை 183,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.