ஐ.ம.சு.முன்னணி படுதோல்வியடையும்: கருத்துக் கணிப்பு
நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்த...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_423.html

நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வியடையும் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை மூன்று மாவட்டங்களில் மாத்திரமே வெற்றி பெறும் எனவும் கம்பஹா, குருணாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே முன்னி வெற்றி பெறும் எனவும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தோல்வியை தழுவும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி இம்முறை பொதுத் தேர்தலில் சுமார் 15 ஆசனங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.