ஷியாம் கொலை வழக்கின் ஒரு சாட்சியாளராக ஜனாதிபதி
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் ஒரு சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_40.html

பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் ஒரு சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த சஞ்சீவவுக்கு சாட்சி வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாட்சிகாரர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் வழக்கிற்கான சாட்சிகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி உட்பட 07 பேரை அழைப்பதா இல்லையா என்பதனை நீதிபதி தீர்மானிக்கப்படும்.
சமீபத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கமைய நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டால் இது இலங்கை வரலாற்றில் சிறப்பான ஒரு சந்தர்ப்பமாகும்


Sri Lanka Rupee Exchange Rate