மகிந்த ஏறிய மேடை சரிந்து விழப் போன நிலை; பசில் மிஸ்ஸிங்: நேற்றைய சுவாரஸ்யங்கள்!
பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது தொடர்பிலான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட அறிவிப்பைக் கேட்பதற்காகவும் அவருக்கு ஆதர...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_38.html

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது தொடர்பிலான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட அறிவிப்பைக் கேட்பதற்காகவும் அவருக்கு ஆதரவு நல்கும் வகையிலும் நேற்று காலை மெதமுலனவில் உள்ள அவரது வாசஸ்தலத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதிலும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பங்கு கொள்ளவில்லை என்பது விசேட அம்சமாகும்.
பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது தொடர்பிலான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட அறிவிப்பு தொடர்பான நிகழ்வு நேற்று மெதமுலனவில் உள்ள அவரது வாசஸ்தல வாளகத்தில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் நிகழ்வு வணக்க வழிப்பாடுகளுடன் ஆரம்பித்து, முற்பகல் 11 மணியளவில் மஹிந்த ராஜபக்ச மெதமுலனவில் ஒன்றுகூடியிருந்த மக்களை சந்தித்து உரையாடினார். இதன்போது அங்கு ஒன்றுகூடியிருந்தவர்கள் பெரும் கோஷம் எழும்பி வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலோனோரிற்கு மெதமுலன வீட்டு வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் இந்த நிகழ்வில் பொலன்னறுவை, மெதிரிகிரிய விகாராதிபதி உள்ளிட்ட 60 மேற்பட்ட பிக்குகள் பங்குபற்றியிருந்தனர்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, கீதாஞ்சன குணவர்தன உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். அத்தோடு மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளி்ட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர்களின் சார்ப்பாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரைாற்றுவதற்கு மேடையேறிய வேளை, மெதமுலனவில் ஒன்று கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.
இதன்போது மஹிந்த எமக்கு வேண்டும்”, எமது வீரர் மஹிந்தவே! , எமது தலைவன் மஹிந்தவே!, மஹிந்தவின் ஆட்சியே எமக்கு தேவை, போன்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பிய வண்ணம் மக்கள் காணப்பட்டனர். மேலும் மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் அடங்கிய பதாகைகளும் ஏந்தியவாறு மக்கள் தோற்றமளித்தனர்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் விசேட உரையை செவிமடுப்பதற்கு கொழும்பிலிருந்து வாகன பேரணி வந்ததன் விளைவாக தெற்கு அதிவேகப்பாதையின் மாத்தறை நுழைவாயில் அருகில் பெரும் வாகன நெரிசலும் காணப்பட்டது. மெதமுலன மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகாமையில் பெருமளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையினால் பெரும் நெருக்கடிக காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மஹிந்த ராஜபக்சவின் வீட்டு வளாகத்தில் விசேட உரைக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடையில் 40 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏறுவதற்கு முற்பட்ட போது, மேடை சரிந்து விழும் நிலை ஏற்பட்டமையால் பலர் மேடையை விட்டு இறங்கினர்.


Sri Lanka Rupee Exchange Rate