பிபா தரவரிசை! முதலிடத்தில் அர்ஜென்டினா அணி
பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்...


பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது.
இதில், சமீபத்தில் முடிந்த கோபா அமெரிக்க தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அர்ஜென்டினா அணி 2வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியது.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் அர்ஜென்டினா இறுதிப் போட்டி வரை சென்றது. இதன்மூலம் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிலி அணி, 8 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை கைப்பற்றியது. பெல்ஜியம் (3வது இடம்), பிரேசில் (6வது), ஸ்பெயின் (12வது), உருகுவே (13வது) அணிகள் பின்னடைவை சந்தித்தன. கொலம்பியா (4வது இடம்), போர்ச்சுகல் (7வது) அணிகள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டன. நெதர்லாந்து (5வது இடம்), ருமேனியா (8வது), இங்கிலாந்து (9வது), வேல்ஸ் (10வது) அணிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.