தேர்தல் கடமைகளை கண்காணிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நாடு முழுவதிலும் பயணம்
பொலிஸாரின் தேர்தல் கடமைகளை கண்காணிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நாடு முழுவதிலும் பயணம் செய்யவுள்ளார். தேர்தல் காலத்தில் எ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_181.html

தேர்தல் காலத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்பது குறித்து பொலிஸ் மா அதிபர், பிராந்தியங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
உரிய முறையில் சட்டத்தை அமுல்படுத்தாத அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
முதல் கட்டமாக பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன், மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் செயலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.