தேர்தல் அறிவிப்பின் பின் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் குறித்து 67 முறைப்பாடுகள் பதிவு
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்ட 67 சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத...

http://kandyskynews.blogspot.com/2015/07/67.html

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு குறிப்பிடுகின்றது.
இதுதவிர பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் காட்சிப்படுத்தப்பட்ட 16 சம்பவங்களும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.
அத்துடன் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட 12 சம்பவங்களும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.
அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை குறித்து எட்டு முறைப்பாடுகளும், அரசாங்க ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் ஒரு சம்பவமும் இந்த காலப்பகுதிக்குள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் முதல் தேர்தல்கள் செயலகத்திற்கு இதுவரை 111 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, தேர்தல் தொடர்பில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் தேர்தல் பணியகம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.