புத்தளத்தில் 5,53,000 பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 9 பேர் தகுதி பெற்றுள்ளனர் என புத்தளம் மாவட்ட தெர...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 9 பேர் தகுதி பெற்றுள்ளனர் என புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க புத்தளம் தொகுதியில் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 402 வாக்காளரும், ஆனமடு தொகுதியில் 1 இலட்சத்து 12ஆயிரத்து 977 வாக்காளரும், சிலாபம் தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 172 வாக்காளரும் வென்னப்புவ தொகுதியில் 10 ஆயிரத்து 688 நாத்தாண்டி தொகுதியில் 89 ஆயிரத்து 575 வாக்காளரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் காரியாலயம் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. தேர்தல் கடமைக்காக மேலதிக, தற்காலிக ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைக்காக சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், கனிஷ்ட உத்தியோகத்தர்கள், சமய ஊழியர்கள் பணியாளர்கள் திரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கான விண்ணப்பப்படிவங்களை அவ்வப்பகுதி பிரதேச செயலகம், பிரதேச சபைகள், கல்விக்காரியாலயம், திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 7262018172986353220

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item