மத்திய மாகாணத்தில் 248,910 பேர் வாக்களிக்க தகுதி
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மத்திய மாகாணத்தில் ஆறு உள்ளூராட்சிமன்றங்களுக்காக 248,910 பேர் வாக்களிக்க தக...

http://kandyskynews.blogspot.com/2015/07/248910.html

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மத்திய மாகாணத்தில் ஆறு உள்ளூராட்சிமன்றங்களுக்காக 248,910 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்காக 64,172 வாக்காளர்களும் அக்குறணை பிரதேச சபைக்காக 42,739 வாக்காளர்களும், யட்டிநுவர பிரதேச சபைக்காக 68,855 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேச சபைக்காக 47,486 வக்காளர்களும் வில்கமுவ பிரதேச சபைக்காக 21,511 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.; நுவரெலிய மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் தலவாக்கலை நகர சபைக்காக 4,187 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மாகாணத்தில் 159 வாக்குச் சாவடிகளில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.