3 வயது சிறுமியை கற்பழித்த 15 வயது சிறுவன்: தாயின் கண் முன்னால் நடந்த கொடூரம்
தென் ஆப்பிரிக்காவில் 3 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் தாயின் கண் முன்னால் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ப...
http://kandyskynews.blogspot.com/2015/07/3-15.html

தென் ஆப்பிரிக்காவில் 3 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் தாயின் கண் முன்னால் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜொகன்ஸ்பெர்க் பகுதியில் உள்ள தொகொஷா குடியிருப்பில் பல்வேறு மக்கள் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மூன்று வயது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதையடுத்து ஓடி சென்று பார்த்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிந்ததால் கதவின் துளை வழியாக பார்த்துள்ளார்.
உள்ளே அவரது 3 வயது மகளை 15 வயது சிறுவன் ஒருவன் கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை திறக்க முயற்சித்துள்ளார். எனினும் திறக்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.
பின்னர் அந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு கதவை திறந்து சிறுவன் வெளியே ஓடிசென்றுள்ளான்.
சிறுமியின் தாய் உள்ளே சென்று பார்த்த போது இரத்த வெள்ளத்தில் கிடைந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate