மகனின் உயிரை குடித்த தந்தையின் வாகனம் (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவில் தந்தையின் வாகனம் மோதி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிர்மி...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_689.html

பிரித்தானியாவில் தந்தையின் வாகனம் மோதி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிர்மின்கம் பகுதியில் உள்ள ஸ்டெச்பொர்டில் வசித்துவருபவர் இம்ரான் யாசின்.
இவர் தனது மிட்சுபுசி (Mitsibushi) ரக வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் திடீரென வாகனம் அருகில் இருந்த சுவரின் மீது மோதியது.
அப்போது அருகில் இருந்த இம்ரானின் 17 மாத குழந்தையான மொகமத் யாசின் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் குழந்தையின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காமில் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை இழந்த இம்ரானின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சிறுவனின் தந்தை கூறியதாவது, நான் வாகனத்தை நிறுத்த எவ்வளவே முயற்சி செய்தேன் எனினும் முடியவில்லை.
அந்த இடத்தில் எனது குழந்தை இருந்ததை நான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate