FIFA வின் 10 மில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகின
FIFA வின் முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வோர்னரின் பொறுப்பில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு FIFA அமைப்பால் அனுப்பப்பட்ட 10 மில்லியன் டொலர் பணத்...
http://kandyskynews.blogspot.com/2015/06/fifa-10.html
FIFA வின் முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வோர்னரின் பொறுப்பில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு FIFA அமைப்பால் அனுப்பப்பட்ட 10 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்துள்ளது என்பது பிபிசியின் புலனாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு முன்னதாக, அந்த நாட்டின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தப் பணம், கரீபியன் தீவுகளில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் பிபிசி ஆராய்ந்துள்ள ஆவணங்களின் படி, அந்தப் பணம் தனிப்பட்ட கடன்களுக்காகவும் கறுப்பு பண பரிமாற்றத்தை மறைப்பதற்காகவும் பணத்தொகை, எடுப்புகளாகவும் ஜேக் வோர்னரினால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த பணத்தில் அரைவாசித் தொகை வோர்னரின் சொந்த நாடான ட்டரினிடாட்டிலுள்ள் சூப்பர்மார்க்கெட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜேக் வோர்னர், தான் இந்த பிரச்சினையில் அனாவசியமாக சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.