கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த
தரம் பிரித்தலின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலா நகரங்களில் கொழும்பு நகரம் முதலிடத்தை பெற்றமை தொடர்பில் தாம் பெரு...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_978.html
முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்ததுடன், தனது அரசாங்கத்தில் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை தனது ஆட்சி காலத்திலேயே ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்வாய் புனரமைப்பு, புதிய வீடமைப்பு யோசனை திட்டம், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை நிர்மாணித்தல், பழைய கட்டிடங்களை புனரமைத்தல், நகரங்களில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை நிர்மாணித்தல் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான அங்கம் வகித்தன என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டங்கள் குறித்து அனைவரும் கலந்துரையாடினர் எனவும், தற்போது அது சர்வதேச ரீதியில் வரவேற்கப்பட்டுள்ளது எனவும், முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக அர்ப்பணிப்பு செய்த அனைத்து தரப்பினருக்கும் தமது உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் கொண்டு செல்வது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.