மின்சார நாற்காலியில் இருந்து மஹிந்தவை காப்பாற்றிய பின்னர் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றார்!– விஜயமுனி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவெறி கட்சி என கூச்சலிட்டது முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் என விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். பிபில ம...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_768.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவெறி கட்சி என கூச்சலிட்டது முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் என விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிபில மெதகம பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திற்கே போதும் என தோன்றிய இலங்கையை அவ்வாறான நிலைமையில் இருந்து மீட்டு எடுத்ததோடு மின்சார நாற்காலியை நெருங்கிய முன்னாள் ஜனாதிபதியை அதனை விட்டு தூரப்படுத்திய பின்னர் அவர் உட்பட் குழுவினர் தற்போது பிரதமர் நாற்காலியை எதிர்பார்க்கின்றார்கள்.
கடந்த காலத்தில் எங்கள் நாட்டில் இன வெறியினர் கூட்டமாக சென்றார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இனவெறி கட்சியல்ல, இதில் நல்ல முஸ்லிம் தலைவர்கள் இருந்தார்கள்.
சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர இலவச கல்வியின் தந்தையாக செயற்பட்டார்.
டபிள்யூ.பீ.மொஹமட் சிறந்த கல்வி அமைச்சர், நான் அதனை பயமின்றி கூறுவேன்.
இனவெறியை தூண்டுவதன் மூலம் தவறு செய்தவர்களுக்கு மக்கள் தண்டனை வழங்கிவிட்டார்கள்.
இந்த அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவோம்.
அன்று நாங்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும், பசில் ராஜபக்சவுக்கும் எதிர்காலம் குறித்து வழிக்காட்டவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவில்லை.
விமல் வீரவனச் இலங்கைக்கு காத்திருந்த மின்சார நாற்காலி குறித்து பேசவில்லை.
பிரதமர் நாற்காலியை குறித்து மாத்திரமே மஹிந்த தரப்பினர் பேசுகின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மின்சார நாற்காலியை கொஞ்சம் தூரப்படுத்தியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.