ரணிலையும் சந்திரிக்காவையும் தரக்குறைவாக திட்டிய மஹிந்தவின் விசுவாசி: குற்றசாட்டு
மஹிந்தவின் தீவிர ஆதரவாளரான தயான் ஜெயதிலக பொதுக்கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரை மிகவும் தரக்குறைவ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_68.html

மஹிந்த மீண்டும் அரசு அதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று செயற்படும் குழுவின் முக்கிய பேச்சாளரான தயான் ஜெயதிலக அந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரில் யாரை ,உங்களின் சாகோதரன் அல்லது குடும்பத்தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
மேலும் ரணில் போன்ற ஒருவரை யாராவது கணவராக தேர்ந்தெடுப்பீர்களா என்று ஏளனமாக கேட்கும் அவர் சந்திரிகாவை பற்றி பேசுவதற்கும் மறக்கவில்லை. சந்திரிக்கா போன்ற ஒருவரை யாராவது தாயாகவோ , சகோதரியாகவோ அல்லது மனைவியாகவோ ஏற்றுகொள்வார்களா என்று கேட்டுள்ளார்.
அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது நெறியல்ல என்ற போதும் தயான் ஜெயதிலக ரணிலை பற்றி பேசும் போது அவரது ஆண்மையை குறித்து கேவலமாக பேசியதாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
மேலும் சந்திரிக்காவை பொறுத்தவரை ஆயிரம் தான் அவரது ஆட்சியில் கசப்பான விசயங்கள் நடந்தாலும் அவரை பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் தயான் ஜெயதிலக பேசியது தவறு என்று பலரும் கூறிவருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தற்போதைய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கை மஹிந்த ஆதரவாளர்களை பொறாமைப்பட மற்றும் கோபப்பட செய்துள்ளது. எனவே அவர்கள் தங்களது கோபத்தை முறையற்ற விதத்திலும் கீழ்த்தரமான பேச்சுகள் மூலமும் வெளிப்படுத்திவருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate