இராணுவ சர்வாதிகாரி சிஸியை நோக்கி கொலைகாரன் என கோஷம் எழுப்பிய பெண் ஊடகவியலாளர்
ஜெர்மனிக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் எகிப்து ஜனாதிபதியும் 2013 இராணுவ சதிப் புரட்சியின் தலைவருமான சிஸி பங்கேற்ற ஊடக மாநாட்டில் இளம் பெ...


ஜெர்மனி அரச தலைவர் ஏன்ஜலா மேர்கலுடன் நேற்று முன் தினம் கூட்டாக ஊடக மாநாட்டை நடத்திய சிஸியிடம் பகிர் எலட்லி சிஸியின் அடக்குமுறை தொடர்பில் பெண் ஊடகவியலாளர் கேள்வி கேட்க முயன்றபோது அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே அவர் சிஸிக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இதன்போது இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதன் நான்கு விரலை உயர்த்திக் காட்டும் ரபா சமிக்ஞையையும் அந்த பெண் காண்பித்தார்.
இதன்போது சிஸியுடன் வந்திருந்த ஜால்ராக்கள் ‘எகிப்து வாழ்க’ என்று கத்தியுள்ளனர் எலட்லி உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு மேர்கல் மற்றும் இராணுவ சர்வாதிகாரி சிஸியும் வெளியேறினர். சிஸியின் வருகைக்கு எதிராக ஜெர்மனியில் ஆர்ப்பாட் டங்கள் இடம்பெற்றதோடு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.