அம்மாவை கத்தியினால் குத்துவது போன்ற ஒரு வேலையினை மஹிந்த செய்துள்ளார் dayasiri-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன என்பதன...
http://kandyskynews.blogspot.com/2015/06/dayasiri.html

dayasiri-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன என்பதனால் மஹிந்த ராஜபக்சவின் மேடைகளில் நான் ஒரு போதும் ஏறப்போவதில்லை என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனேயே உள்ளதாகவும்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முன்னர் அனைத்து பதவிகளும் கிடைப்பதற்கான காரணம் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தமையினாலேயே எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தமையினாலேயே அமைச்சராகினார், பிரதமராகினார், ஜனாதிபதியாகினார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என்ற காரணத்தினாலே அவரால் இவ்வாறான பதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
சரியாக கூறினால் ஒரு அம்மா தன் பிள்ளையை பெற்று வளர்ப்பதனை போன்றே மஹிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தார். எனினும் தன் அம்மாவை கத்தியினால் குத்தும் ஒரு வேலையினை மஹிந்த ராஜபக்ச செய்வார் என நான் ஒரு போது நினைக்கவில்லை என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate