இரத்தினபுரியில் விபத்து: நான்கு பேர் பலி
எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்...


எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
இரத்தினபுரி – கொழும்பு வீதியூடாக வேகமாகப் பயணித்த முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் குடைசாய்ந்ததாகவும்
இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியிலிருந்த 16 முதல் 29 வயதுக்கு இடையிலான மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயணித்த 39 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.